முதுமை அடைவது என்பது இயல்பான போக்கு என்றாலும் முதுமைக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுவதில் யோகப் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.
* ஒருவரின் முதுகெலும்பு எவ்வளவுக்கெவ்வளவு நலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவரின் உடல் நலம் மேம்பட்டதாக இருக்கும். ஒருவரின் முதுகுத்தண்டு எந்த அளவு நெகிழ்வுத் தன்மையோடு இருக்கிறதோ அந்த அளவுக்கு வயதாவதால் ஏற்படும் உடல் இறுக்கம் தவிர்க்கப்படுகிறது. யோகா பயில்வதால் முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மை பாதுகாக்கப்படுகிறது.
* தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வயது கூடும்போது மலச்சிக்கல் மற்றும் செரியாமை ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆசனங்கள் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துவதால் இப்பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டு செரிமான மண்டலம் செம்மையாக இயங்குகிறது.
* வயதாகும்போது ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று உடல் சமநிலையில் (balance) மாற்றம் ஏற்படுவது. யோகாசனம் உடல் சம நிலையை மேம்படுத்துவதன் மூலம் முதுமையினால் சமநிலை இழத்தல் தவிர்க்கப்படுகிறது.
* யோகாசனம் பயில்வதால் மூட்டுகள் பலமாக இருப்பதோடு மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.
* தொடர்ந்து யோகப்பயிற்சி செய்யும்போது நினைவாற்றல் பெருகுகிறது. வயது கூடும்போது நினைவாற்றல் குறைதல் என்பது பொதுவாகக் காணக் கூடியது. ஆனால், ஆசனங்கள் பயில்வதன் மூலம் அந்நிலையைத் தவிர்க்கலாம்.
* மனச்சோர்வு என்பது இக்காலத்தில் இளையவர்களிடமும் காணப்பட்டாலும், வயதில் முதியவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது. மனச் சோர்வு அகலுகிறது. அனைத்துக்கும் மேலாக எந்த அளவுக்கு நாம் யோகா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோமோ அந்த அளவுக்கு நம் மனம் இளமையாக இருக்கும். இளமையான மனம் உடலை இளமையாக வைக்க உதவுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM