தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்!

Published By: Digital Desk 3

09 Aug, 2022 | 09:55 AM
image

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,  squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் தேசிய ரீதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் மூன்று சாதனைகளை படைத்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதை அடுத்து பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35