கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான புளோரிடா, பென்சில்வேனியா மற்றும் ஒஹையோ ஆகியவை உள்ளிட்ட பெரும்பான்மையான அமெரிக்காவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு அதிகமாக இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கணினி கோளாறால் ஏற்பட்ட பிரச்சனைகளால், வடக்கு கரோலினாவின் சில பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவே அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது வரை அமெரிக்க ஜனாதிபதியாக எந்த பெண்ணும் பதவி வகித்ததில்லை.

மேலும், அமெரிக்க அரசியல் பதவிகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியிருக்காத மற்றும் அந்நாட்டின் இராணுவத்தில் பணியாற்றியிருக்காத யாரும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.