ஒரு நிமிடத்தில் ஹெலிக்கொப்டரில் அதிகமுறை 'புல்-அப்ஸ்' எடுத்து கின்னஸ் உலக சாதனை

Published By: Digital Desk 5

08 Aug, 2022 | 09:34 PM
image

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள்.

உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிக்கொப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில், ஹெலிக்கொப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர்.

முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். இதனால் முன்பு 23 முறை புல்-அப்ஸ் எடுத்திருந்த அர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் சாதனையை முறியடித்தார்.

அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிக்கொப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார். அர்ஜென் ஆல்பர்ஸ் 2-ம் இடம் பிடித்தார்.

ஒரு நிமிடத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அதிக புல்-அப்களை எடுத்த சாதனை இப்போது ஸ்டானுக்கு சொந்தமானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49