சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்கப்போவதில்லை : ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு - சுனில் ஹந்துநெத்தி

By Vishnu

08 Aug, 2022 | 10:07 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க முடியாது என்பதைக் கூறுவதற்காக நாளை செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஏனைய கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைப் போன்றே எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் குறித்த எமது நிலைப்பாட்டை நாம் தெளிவுபடுத்துவோம்.

ஜனாதிபதி அரசாங்கமொன்றை அமைத்து , அதன் பின்னரே சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இது பிரயோசனமற்றது.

ரணில் விக்கிரமசிங்க , ரணில் ராஜபக்ஷவாக மாற்றமடைந்த பின்னர் இடைக்கால அரசாங்கம் குறித்த செயற்பாட்டை மறந்துவிட்டார்.

குறுகிய காலத்தில் தேர்தலொன்றுக்கு செல்லக் கூடியவாறான சர்வகட்சி அரசாங்கத்தையே நாம் கோரினோம். எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாறாக ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ள என்பதை சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்குமான அரசாங்கமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

எனவே நாம் சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கக் போவதில்லை.

எனினும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க முடியாது என்பதைக் கூறுவதற்காக ஜனாதிபதியை சந்திப்போம்.

அனைத்து கட்சிகளும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வகட்சி அரசாங்கமொன்று தற்போது இல்லையல்லவா? அவ்வாறெனில் தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னரே இது குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்ஷாக்களுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைத்து , அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அழைப்பு விடுப்பது பிரயோசனமற்றது.

பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைத் தவிர், வேறு எவருக்கும் தேர்தலுக்குச் செல்லும் எண்ணம் கிடையாது. ஆனால் நாட்டு மக்கள் தேர்தலையே எதிர்பார்க்கின்றனர்.

காரணம் தற்போதிருப்பது மக்கள் ஆணையற்ற அரசாங்கமாகும். மக்கள் விரும்பாத தலைவருடன் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே தான் மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு கோருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல்...

2022-12-08 16:00:50
news-image

சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும்...

2022-12-08 16:04:40
news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 15:50:49
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48