சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் - கிரியெல்ல

Published By: Digital Desk 5

08 Aug, 2022 | 03:24 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தலைமையில் அமைப்பதற்கு திட்டமிட்டிருக்கும் சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி  நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி அரசாங்கம் எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக பெரும்பாலான கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.

இதுதொடர்பாக ஜனாதிபதி அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகின்றார். எமது கட்சியுடனும் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். 

இந்த கலந்துரையாடல்களின் போது ஜனாதிபதி பல விடயங்களை தெரிவித்திருந்தபோதும் சர்வகட்சி அரசாங்கம் செயற்படும் கால வரையறை தொடர்பில் தெரிவிக்கவில்லை.

ஏனைய விடயங்களைவிட சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஆரம்பமாக நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் எந்தவொரு கட்சியும் சர்வகட்சி அரசாங்கத்துக்காக குறுகிய காலத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். என்றாலும் நீண்டகாலத்துக்கு அவ்வாறு செயற்பட முடியாது.

ஏனெனில் அனைத்து நடவடிக்கைகளையும்  கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளும் அடிப்படையில் மாத்திரமே செயற்பட முடியும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் ஆட்சியின் இறுதிக்காலத்தில், சுமார் 6மாத காலம் என்ற குறுகிய காலத்துக்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததன் பின்னர், அந்த கால எல்லைக்குள் தேர்தலுக்கு செல்லவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் புதிய ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மேலும் 3வருடங்களுக்கு தேர்தல் எதுவும் நடத்துவதில்லை என தெரிவித்திருக்கி்ன்றார். அதனால் சர்வகட்சி அரசாங்கம் அமைத்தால் அதன் கால எல்லை தொடர்பில் பாரிய சந்தேகம் எழுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15