8 வரு­டங்­க­ளாக நாயை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய பெண்ணும் படம்­பி­டித்த முன்னாள் காத­லனும் கைது

Published By: Vishnu

08 Aug, 2022 | 12:55 PM
image

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், 8 வரு­டங்­க­ளாக  தனது நாயை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

இப்பெண் மேற்­படி துர்­ந­டத்­தையில் ஈடு­ப­டு­வதை படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் அவரின் முன்னாள் காத­லனும் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த கிறிஸ்­டினா கலேலோ எனும் 36 வயது பெண்ணே நாயை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 

8 வருட காலத்தில் பல தட­வைகள் இத்­துஷ்­பி­ர­யோகம் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.

நாயை கிறிஸ்­டினா துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­து­வதை படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் அவ­ரின முன்னாள் காதலன் ஜெப்ரி ஸ்பிரிங்கர் எனும் 39 வயது நபரும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கிறிஸ்­டினா கலேலோ கடந்த மே மாதம் குடும்ப வன்­முறை குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தவர் எனத் தெரியவந்துள்ளது. புதிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் 50,000 டொலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்