ஆற்றில் சிக்­கிய திமிங்­கி­லத்­துக்கு விற்­றமின் ஊசி 

By Vishnu

08 Aug, 2022 | 12:55 PM
image

பிரான்­ஸி­லுள்ள ஆறு ஒற்றில் சிக்­கி­யுள்ள திமிங்­கி­லத்­துக்கு விற்­ற­மின்­களை வழங்­கு­வ­தற்கு அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

பிரான்ஸின் தலை­நகர் பாரி­ஸி­லி­ருந்து 70 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள சென் நதியில் வெள்ளை திமிங்­கலம் ஒன்று சிக்­கி­யுள்­ளது. 

13 அடி நீள­மான இத்­தி­மிங்­கிலம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் தட­வை­யாக அவ­தா­னிக்­கப்­பட்­டது.  பொது­வாக ஆர்ட்டிக் சமு­த்திரத்தில் காணப்­படும் இவ்­வகை வெள்ளைத் திமிங்­கிலம் ஏன் சென் நதிக்குள் வந்­தது என்­பது தெரி­ய­வில்லை. 

இத்­தி­மிங்­கி­லத்தை மீண்டும் சமு­த்தி­ரத்­துக்கு நீந்திச் செல்ல வைப்­ப­தற்கு அதி­கா­ரிகள் மேற்­கொண்ட முயற்­சிகள் பல­ன­ளிக்­க­வில்லை. 

இத்­தி­மிங்­கலம் போஷாக்கு குறைப்­பாட்­டினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வி­த்­துள்­ளனர்.

இத்­தி­மிங்­கி­லத்­துக்கு உண­வுகள் வழங்­கப்­பட்ட போதிலும் அவற்றை திமிங்­கிலம் உட்­கொள்­ள­வில்லை என அதி­காரி ஒருவர் தெரி­வித்துள்ளார். உணவு உட்­கொள்­வதில் அதற்கு ஏதோ பிரச்­சினை உள்­ள­தாகத் தென்­ப­டு­கி­றது என அவர் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில், திமிங்­கி­லத்­துக்குப் பசியை தூண்­டு­வ­தற்­காக ஊசி மூலம் விற்­ற­மின்­களை செலுத்­து­வ­தற்கு அதி­கா­ரிகள் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இத்­தி­மிங்­கிலம் நீந்­து­வ­தற்கு போதிய உடற்­ப­லத்தைப் பெற்றால், 160 கிலோ­மீற்றர் தூரம் நீந்தி ஆங்­கிலக் கால்­வாய்க்கு செல்ல வைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

நதி­யி­லி­ருந்து திமிங்­கி­லத்தை வெளியே எடுத்து அதைச் சென்று கடலில் விடுவது குறித்தும் ஆராயப்படுகிறது. ஆனால், ஆபத்தான இப்பயணத்துக்கு மேலும் அதிக உடல்வலிமை அத்திமிங்கிலத்துக்குத் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேக்கில் வடிவமைக்கப்பட்ட சுயவிபரக்கோவை

2022-09-28 12:52:07
news-image

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...

2022-09-27 12:33:32
news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45
news-image

தேனி­ல­வின்­போது பாலியல் தொழி­லா­ளியை நாடிச் சென்­றவர்...

2022-08-29 11:36:30
news-image

700 ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக்...

2022-08-29 11:33:44