யாழ். ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃப் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சியசாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃப் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சியசாலையை உடைத்து 7 இலட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்தன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர். சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM