ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை கோரி இன்று சிறப்பு வாதங்கள்

By T Yuwaraj

08 Aug, 2022 | 12:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், அவ்வழக்கு இன்று (8)  மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல் | Virakesari.lk

இவ்வழக்கு தொடர்பில் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய இவ்வழக்கு இவ்வாறு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு பிணை கோரி சிறப்பு வாதங்கள் முன் வைக்கப்படவுள்ளன.

பொது மக்கள் போராட்டங்களின் போது முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய  ஜோசப் ஸ்டாலினை, உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் தலைமையில்  கடந்த 3 ஆம் திகதி மாலை கோட்டையில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்துக்கு திடீரென நுழைந்த சுமார் 50 வரையிலான பொலிஸார் ( நான்கு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் )  கைது செய்து அழைத்து சென்றனர்.

கடந்த  மே 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றை மையப்படுத்தி  ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு  எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த 4 ஆம் திகதி கோட்டை நீதிவானின் இல்லத்தில் பொலிஸார் அவரை ஆஜர்ச் செய்த போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இவ்வாறான பின்னணியிலேயே  இன்று திங்கட்கிழமை மீள குறித்த வழக்கை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:13:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02
news-image

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...

2023-01-28 09:49:28
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல்...

2023-01-28 09:41:35