உண்மையான நண்பனை அறிவதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் - பல்லேகந்த ரதனசார தேரர்

Published By: Digital Desk 4

07 Aug, 2022 | 10:24 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்களின் பாதுகாப்பு , இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஒத்துழைப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு சீன இராணுவ கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதை தடுத்து நிறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமரபுர மகா நிக்காயவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பல்லேகந்த ரதனசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச தொடர்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் , பொறுப்புடனும் செயற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் , உண்மையான நண்பர்கள் யார் , நண்பனைப் போன்றவர்கள் யார் என்பதை வேறுபடுத்தி இனங்காண்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பல்லேகந்த ரதனசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சீன கப்பலின் வருகை தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீனக் கப்பல் தொடர்பில் மகாசங்கத்தினர் மற்றும் நாட்டு பிரஜைகள் சார்பில் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் , இவ்வாறான குறுகிய நோக்கமுடைய வெளிநாட்டு தொடர்புகள் எமக்கு பாதகமாகவே அமையும்.

எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் இலக்குடனேயே இந்தக் கப்பல் வருகை தருவதாக இலங்கை அரசாங்கத்தினாலும் , சீன அதிகாரிகளாலும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எமக்கு பல்வேறு வழிகளிலும் பெருமளவான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள அண்டை நாடான இந்தியா , இது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.

மகா சங்கத்தினரும் பொது மக்களும் தற்போதுள்ள நிலைமைக்கு மத்தியில் சர்வதேச தொடர்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் , பொறுப்புடனும் செயற்படுகின்றனர்.

இதன் போது உண்மையான நண்பர்கள் யார் , நண்பனைப் போன்றவர்கள் யார் என்பதை வேறுபடுத்தி இனங்காண்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.

தற்போது இந்த இராணுவ கப்பல் இலங்கையின் நட்பு நாடுகளில் சர்ச்சைக்குரிய ஒரு செய்தியாகியுள்ளதோடு , இதன் மூலம் இலங்கைக்கு சாதகமான வாய்ப்புக்களையும் இழக்க நேரிடும்.

நட்பு நாடான இந்திய மற்றும் ரஷ்யா உள்ளிட்டவை இலங்கைக்கு விசேட ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் , சீன இராணுவ கப்பலொன்று எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றமையாது,  அந்த நட்பு நாடுகள் மத்தியில் எம்மீது எதிர்மறையான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.

அத்தோடு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளிலும் இது எதிர்மறையான தாக்கத்தை செலுத்தும்.

கண்காணிப்புக்கள் தொடர்பான உயர் தொழிநுட்பத்தைக் கொண்ட இந்த கப்பலானது, கடும் எரிபொருளை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள எமது நாட்டுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகவே வருகை தந்துள்ளது என்று தெரிவிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமானதொரு காரணியல்ல.

பொது போக்குவரத்துக்கள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற பாரியதொரு கப்பலுக்கு எரிபொருளை விநியோகிக்க இலங்கை முன்வருமாயின் அது இந்த சந்தர்ப்பத்தில் அநாவசியமானதொரு விடயமாகும்.

நாட்டு மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கமும் , அதிகாரிகளும் இந்த கப்பல் நாட்டுக்கு வருகை தருவதை தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58