(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார கொள்கை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முறையான திட்டத்தை முன்வைக்கவில்லை.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் உறுதியான திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்ததை தொடர்ந்து சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில பரிசீலிப்போம் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும்10 அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஒன்றிணைய இணக்கம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
அமைச்சரவையின் எண்ணிக்கை வரையறுத்தல்,தேசிய நிறைவேற்று சபை உருவாக்கம்,சர்வக்கட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டு காலத்தை மட்டுப்படுத்தல்,அரச செலவினங்களை குறைத்தல் உள்ளிட்ட பிரதான யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
தவறான பொருளாதார கொள்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளது.பொருளாதா கொள்கை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித திட்டங்களையும் முன்வைக்கவில்லை.
நீண்டகால கொள்கை அடிப்படையிலாவது பொருளாதார கொள்கை கட்டம் கட்டமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி உறுதியான திட்டத்தை முன்வைத்ததை தொடர்ந்து சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம்.
கட்சி என்ற ரீதியில் ஒன்றிணையாமல்,கட்சி உறுப்பினர்களை மாத்திரம் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைத்துக்கொள்வது முறையற்றதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM