கிளிநொச்சியில் இடம்பெற்ற மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி

Published By: Vishnu

07 Aug, 2022 | 10:34 PM
image

கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இன்று இடம்பெற்றது.குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. 

இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியானது அபியகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

300க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்ட குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த போட்டியில் பங்குபற்றியவர்களில், ஆண் குழுவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.கீரன் முதல் இடத்தினை பெற்றார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ்.கிந்துசன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.

பெண்கள் குழுவில், வவுனியாவை சேர்ந்த எஸ்.கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண்டார். முல்லைத்தீவை சேர்ந்த என்.கேமா இரண்டாம் இடத்தையும், எல்.மேரிவினுசா மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.

முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களிற்கு மறையே 1 லட்சம், 50ஆயிரம், 25 ஆயிரம் ரூபா காசோலையும் ஏற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேவேளை, போட்டியில் பங்குபெற்றோருக்கான சான்றிதழ்களும், ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17
news-image

ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டி...

2025-03-10 18:33:39
news-image

மாளிகாவத்தை யூத்தை அதிரவைத்து 3 -...

2025-03-09 23:17:50
news-image

நியூஸிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா...

2025-03-09 23:53:26