சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதாயின் நாட்டு மக்களுக்கு முதலில் பகிரங்கமாக அறிவிப்போம் - விமல் வீரவன்ச

By Digital Desk 5

07 Aug, 2022 | 04:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போவதாக ஜனாதிபதியிடம் குறிப்பிடவில்லை.சிறந்த செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதாயின் அதனை நாட்டு மக்களுக்கு முதலில் பகிரங்கமாக அறிவிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வக்கட்சி அரசாங்கத்தில் நான் இணைந்துக்கொள்வதாக குறிப்பிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ள நிலையில் இடைக்காலத்திற்கு சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது பொருத்தமானதாக அமையும் என்ற யோசனையை நாங்களே முதலில் முன்வைத்தோம்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பிலான யோசனையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி முன்வைத்தோம்.இருப்பினும் அவர் அது குறி;த்து அவதானம் செலுத்தாமலிருந்தது கவலைக்குரியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 12 யோசனைகளை உள்ளடக்கிய திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த மாதம் 28ஆம் திகதி முன்வைத்தோம்.இந்த விடயங்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்மோம்.

சிறந்த செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைவதாயின் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44