(எம்.ஆர்.எம்.வசீம்)
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எதிர்க்கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரளிப்போம். அதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவேண்டிய தேவை இல்லை என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவி்க்கையில்,
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கோரி இருக்கின்றது.
என்றாலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளில், 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருக்கின்றது.
நாட்டில் பல அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் இயங்குகின்றன. அவற்றை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது பாரியதொரு சவாலான விடயம்.
என்றாலும் அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சி என்றவகையில், அதுதொடர்பில் ஆராய்ந்து தேவையான ஆதரவவை வழங்க முடியுமாகும்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பெற்றுக்கொள்ள பாரிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அத்துடன் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்.
அதற்காக அரசாங்கத்துடன் இணையவேண்டும் என்ற தேவை இல்லை. ஏனெனில் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ்வினரின் அழுக்குகளை சுத்தப்படுத்தும் குப்பை லாெறியாகும். அவ்வாறான அரசாங்கத்தில் இணைந்துகொள்ள எந்த தேவையும் இல்லை என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM