ஜோசப் ஸ்டாலினை கைதுசெய்திருக்க கூடாது – அவரது நிலைப்பாடுகள் செயற்பாடுகள் குறித்து எனக்கு நன்கு தெரியும்- ஐநாவின் விசேட அறிக்கையாளர்

Published By: Rajeeban

07 Aug, 2022 | 12:03 PM
image

-

நான் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதலாம் ஆனால் அவர்கள் எப்போதும் பதிலளிப்பதில்லை நான் அனுப்பிய விவகாரங்களில் 44 வீதமானவற்றிற்கே அவர்கள் பதிலளித்துள்ளனர்.

-

ஜோசப் ஸ்டாலினை கைதுசெய்திருக்ககூடாதுஅவரை பற்றி எனக்கு தெரியும்,அவரது நிலைப்பாடுகள் பற்றி எனக்கு தெரியும் அவரது அமைதியான செயற்பாடுகள் பற்றி எனக்கு தெரியும்.ஐக்கியநாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்கள் என்ற வரைவிலக்கணத்தின் கீழ் அவர் ஒரு மனித உரிமை பாதுகாவலர் என்பது எனக்கு தெரியும்.

என ஐநாவின் மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லர் தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Sandeshaya by Saroj 

கேள்வி-நீங்கள் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலின் கைதுகுறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ளீர்கள் - ஏன் நீங்கள் கரிசனைகொண்டுள்ளீர்கள்

பதில்- நான் எப்போதும் கரிசனைகொண்டுள்ளேன், அமைதியான வழியில் செயற்படும், அரசாங்கம் பாதுகாப்பு படையினர் அல்லது வேறு எந்த தரப்பினராலும் இலக்குவைக்கப்பட்டுள்ள  மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பான விவகாரங்களை கையாள்வதே எனக்கு வழங்கப்பட்ட ஆணை.

இந்த விவகாரத்தில் - உலகம் எங்கிலும் இது இடம்பெறுகின்றது – அரசாங்கங்கள் நிச்சயமாக விதிமுறைகளை நடைமுறைககளை  நீதிமன்ற உத்தரவுகளை தந்திரோபாயங்களை அமைதியான ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு பயன்படுத்துகின்றன. தாங்கள் நெருக்கடியில் உள்ளபோது தாங்கள் விமர்சிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இவ்வாறான முறைகளை பயன்படுத்துகின்றன.

இலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன,பல தரப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகவே எனது வழங்கப்பட்டுள்ள ஆணையின் கீழ் வரும் எவரெல்லாம் இலக்குவைக்கப்படுகின்றார்களோ அவர்கள் குறித்து நான் பேசவேண்டும் செயற்படவேண்டும்.

ஜோசப் ஸ்டாலின் அவர் குறித்து நான் கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தேன்,

அவரை பற்றி எனக்கு தெரியும்,அவரது நிலைப்பாடுகள் பற்றி எனக்கு தெரியும் அவரது அமைதியான செயற்பாடுகள் பற்றி எனக்கு தெரியும்.ஐக்கியநாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்கள் என்ற வரைவிலக்கணத்தின் கீழ் அவர் ஒரு மனித உரிமை பாதுகாவலர் என்பது எனக்கு தெரியும்.

என்னை பொறுத்தவரை அவர் கைதுசெய்யப்பட்டிருக்ககூடாது.

கேள்வி- ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவு செய்யப்பட்ட நீதி குறித்து குற்றம்சாட்டுகின்றனர், உண்மையில் வன்முறைகளை தூண்டியவர்கள் வெறுப்பை தூண்டியவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்- உங்கள் கருத்து என்ன?

பதில் - நான் இந்த ஆணையை பொறுப்பேற்ற பின்னர் 9 தடவைகள் நான் இலங்கை அரசாங்கத்திற்கு இலக்குவைக்கப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து எழுதியுள்ளேன்என்பது எனக்கு தெரியும்.

ஆகவே இலங்கை என்பது மனித உரிமை ஆர்வலர்கள் இலக்குவைக்கப்படும் நாடு.

எனது அனுபவத்தின் அடிப்படையில் - நான் நான்பது வருடங்கள் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலும 20 வருடங்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் தொடாபிலும் பணியாற்றியுள்ளேன்.

ஆகவே யார் மனித உரிமை ஆர்வலர் என்பது எனக்கு தெரியும்.

அரசாங்கம் முதலில்  கட்டுப்படுத்த முயலும்,குற்றவாளிகளாக சித்தரிக்கும் கைதுசெய்யும் அச்சுறுத்தும்  குழுவினர் மனித உரிமை பாதுகாவலர்கள் என்பது எனக்கு தெரியும்,ஏனென்றால் அவர்களே அரசாங்கத்தின் அநீதிக்கு  அதிகாரத்திற்கு வெளிப்படைத்தன்மைஇன்மைக்கு  ஊழலிற்கு எதிராக முதலில் சவால் விடுக்கின்றனர்,

எங்களிற்கு நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கு மனித உரிமை பாதுகாவலர்கள் அவசியம்.

ஆனால் பல ஊழல்மிக்க நியாயமற்ற அரசாங்கங்கள் அதனை விரும்புவதில்லை,

கேள்வி-அறிக்கைகளை வெளியிடுவதற்கு அப்பால் சர்வதேச சமூகம் என்ன செய்யவேண்டும்?

பதில்- என்னிடம் மட்டுப்படுத்தப்பட்ட சாதனங்களே உள்ளன.

நான் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதலாம் ஆனால் அவர்கள் எப்போதும் பதிலளிப்பதில்லை நான் அனுப்பிய விவகாரங்களில் 44 வீதமானவற்றிற்கே அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இலங்கை தூதுவர் என்னை சந்தித்தால் நான் அவருடன் பேசலாம் அதற்கு அப்பால் சர்வதேச சமூகம்  இலங்கை அரசாங்கத்துடன் கருத்துசுதந்திரத்திற்கான உரிமை ஒன்றுகூடலிற்கான உரி;மை பங்குபெறுவதற்கான உரிமை குறித்து எப்போதும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்.

அந்த பேச்சுவார்த்தைகளின் மூலம்  மனித உரிமை ஆர்வலர்கள் சிவில் சமூத்தினர் துன்புறத்தலில் ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் திட்டமொன்றை இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மூலம் சர்வதேச சமூகம் உருவாக்கவேண்டும்

கேள்வி - இலங்கை அரசாங்கம் உங்களை செவிமடுக்கவில்லை என்றால் ?

அது எப்போதும் கடினமான விடயம் இலங்கையுடனான எனது கடந்த கால வரலாறுகள் மூலம்  பல பல சவால்கள் காணப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் நாங்கள் தெரிவிப்பதை செவிமடுக்காவிட்டால் ஐநாவிடம் உள்ள சாதனங்கள் - தீர்மானங்களை நிறைவேற்றுதல் சில குறிப்பிட்ட விடயங்களை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளுதல்,ஆனால் அதற்கு அப்பால் என்ன நடவடிக்கையை எடுக்கவேண்டும் என கூட்டாக தீர்மானிப்பது   ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடுகளின் உறுதிப்பாட்டை பொறுத்தது,

அவர்களிற்காக நான் கருத்து தெரிவிக்க முடியாது,

அதேவேளை நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிவில் சமூகம் செய்யவேண்டிய விடயம்,மாற்றத்திற்காக செயற்படுவது அநீதிக்கு எதிராக அணிதிரட்டுவது இதுவே மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் சமூகத்தினரின் பணி.

என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தவேண்டும், அநீதியை அவர்கள் ஆவணப்படுத்தவேண்டும்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04