இராணுவ வீரர்கள் மீது கடுமையாக தாக்குமாறு உத்தரவிடும் பொலிஸாருக்கு இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பெரும்பன்மை மக்கள் தொடர்பில் கவலையில்லை மாறாக சம்மபந்தன் உள்ளிட்ட தமிழ் பிரிவினைவாத சக்திகளின் கோரிக்கைக்கு அமைவாகவே செயற்படுகின்றதென தேசிய சுதந்திர முன்னணியும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பும் கூட்டாக வலியுறுத்தின. 

அதேநேரம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் பகிரப்பட்டு பொலிஸ், காணி மற்றும் முழுமையான நிதி கையாளுகை பலத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி ஈழமாக மாற்றும் முயற்சியில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாக அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தே.சு.மு மற்றும் மக்கள் தூய்மையான நாளைக்கான அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள்  மேற்கண்டவாறு தெரிவித்தனர்.