இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினர் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
நீதியமைச்சர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என கர்தினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவந்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளர் சமர்ப்பிப்பார்.
இந்த அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய நபராக ரொனிமுங்கொவன் காணப்படுவார் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் அவர் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளன.
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரனை இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஆராய்ந்துள்ளன.
மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் ஏழுவரை இடம்பெறும்.
இந்த வருட மே மாதம் வரை இலங்கை தொடர்பான முகன்மை குழு முன்னைய தீர்மானத்திற்கு மேலும் இரண்டுவருடக கால அவகாசம் வழங்குவது குறித்து ஆராய்ந்து வந்தது.(2022 செப்டம்பர் முதல் 2024 வரை)
எனினும் காலிமுகத்திடலில் - அலரிமாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கப்பட்டமை போன்றவை இலங்கை தொடர்பான குழுவினரின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் இலங்கை தொடர்பான கடுமையான தீர்மானமொன்றை தயாரிக்கவேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த நாடுகள் மனித உரிமை மீறல்களை கவலையளிக்கும்போக்கு என தெரிவித்துள்ளனர்.
எனினும் முன்னைய தீர்மானத்தின் பல விடயங்கள் புதிய தீர்மானத்தில் இடம்பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM