(எம்.மனோசித்ரா)
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கருகிலுள்ள கடற்பகுதியில் தலை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கருகில் கடற்பிரதேசத்தில் நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு குறித்த சடலம் மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட நபர் 35 - 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என்றும் , உயரம் 5 அடி 8 அங்குலம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த நபர் கருப்பு நிறக்காட்சட்டையும் , நீல நிற சட்டையும் அணிந்துள்ளார். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ள நபர் யார் என்பது இன்று (06) மாலை வரை அடையாளங் காணப்பட்டிருக்கவில்லை.
சடலம் குறித்த ஆரம்ப கட்ட நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சடலத்தின் தலைப்பகுதியும் , கால் பகுதியும் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வத்தளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM