விலை அதிகரிப்பால் உணவை குறைக்கவேண்டிய நிலையில் இலங்கை மக்கள்

Published By: Rajeeban

06 Aug, 2022 | 03:15 PM
image

உலக உணவு திட்டம்

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதாரநெருக்கடி  தீவிரமான உணவு நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் இயக்குநருமான அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார்

அதிகரிக்கும் விலைகள் குறைவடையும் விளைச்சல்கள் உக்ரைன் யுத்தத்தின் விளைவுகள் முக்கிய விநியோகத்திற்கு வழங்குவதற்கான அரசாங்கத்திடம் போதிய நிதியின்மையே இவற்றிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.'

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்தவற்கான நிதி நாட்டிடம் இல்லை என தெரிவித்துள்ள அவர் உலக உணவுதிட்டத்திற்கும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளிற்கும் நிதிஉதவி வழங்கும் சமூகத்தின் மேலும் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

உலக உணவுஸ்தாபனமும் ஐக்கிய நாடுகளின் உலக உணவு விவசாய ஸ்தாபனமும் சமீபத்தில் இணைந்து முன்னெடுத்த ஆய்வுகளின் போது 30 வீதமான மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளமை தெரியவந்தது.

உலக உணவுதிட்டம் முன்னர் ஒருபோதும் இல்லாத உலக உணவு நெருக்கடி குறித்து எச்சரித்ததன் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை 90 வீத உணவு பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளதுஇஅரிசி போன்றவற்றை கூட பெறமுடியாத நிலையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் காணப்படுகின்றன.

நாங்கள் காணும் நிலைமை அச்சம்தருவதாக உள்ளதுஇ என  சித்தீக் தெரிவிக்கின்றார்.

 இலங்கையின் நிலவரம் ஒரு வருட காலப்பகுதியில் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நேரில் பார்த்தவர் இவர்.

போதிய போசாக்கு மிக்க உணவுகளை பெறுவதற்கு மில்லியன் கணக்கான மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உடனடி தலையீடுகள் இல்லாவிட்டால் இலங்கையின் எதிர்காலம் இருள்மயமாக உள்ளது - 22 மில்லியன் மக்களிற்கு உணவு வழங்க கூடிய அளவிற்கு அந்த நாடு வளர்ச்சியடையவேண்டும்.

வீழ்ச்சியடைந்துள்ள அறுவடையும் உக்ரைன் தாக்கங்களும்.

மக்கள் தாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவை குறைக்கின்றனர் நாலில் ஒருவர் ஒருநேர உணவை தவிர்க்கின்றனர் என தெரிவிக்கின்றார் சித்தீக்.

மக்கள் தங்களின் பெறுமதி மிக்க சேமிப்புகளை பயன்படுத்துகின்றனர் அல்லது உயிர்வாழ்வதற்காக கடன்பெறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பல்வேறு காரணிகள் இலங்கையின் உணவு நெருக்கடியை உருவாக்குகின்றனஇவிவசாயத்தை மேலும் பேண்தகுதன்மை மிக்கதாக மாற்றுவதற்காக அரசாங்கம் கடந்த வருடம் இரசாயன உரங்களை தடை செய்ததுஇஆனால் அந்த நடவடிக்கை விளைச்சலை பெருமளவிற்கு குறைத்துள்ளதுஇஇறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் - உரங்களால் உண்டான பாதிப்பின் தாக்கம் தொடர்கின்றது.

நாடு 30இ000 தொன் சோளத்தை இறக்குமதி உற்பத்தி செய்கின்றது என தெரிவிக்கும் சித்தீக்இவிவசாயிகள் பயன்படுத்தும் விதைகள் அதிக விளைச்சலை தராதவகையாக காணப்படுவதால் இயற்கை உரத்துடன் ஒத்துப்போவதில்லை என்பதால் உற்பத்தி மிகக்குறைவாக உள்ளது என தெரிவிக்கின்றார்.

இரண்டு மோசமான விளைச்சலிற்கு பின்னர் மூன்றாவது விளைச்சல் பேரழிவாக காணப்படும் என சித்தீக் தெரிவிக்கின்றார்.

உக்ரைன் யுத்தத்தின் எதிர்விளைவுகளையும் இலங்கைஎதிர்கொள்கின்றதுஇஉக்ரைன் யுத்தம் முக்கிய தானிய ஏற்றுமதியை பாதித்;துள்ளதுடன் உலக உணவு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதுடன் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகளை வழங்கிய இரண்டு முக்கிய சந்தைகளையும் பாதித்துள்ளது- ரஸ்யா -உக்ரைன்.

இதன்காரணமாக இலங்கைக்கான டொலரை குறையும் நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இறககுமதிசெய்வதற்கான இலங்கையின் திறiனையும் மோசமாக பாதித்துள்ளது- இது மோசமான விளைவுகளை ஏற்;படுத்தியுள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாட்டை தொடர்ந்து எரிபொருள் இல்லாததால் 200இ000 மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் என தெரிவிக்கின்றார் என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் இயக்குநருமான அப்துல் ரஹீம் சித்தீக்

சிறிய விவசாயிகளிற்கு நாங்கள் ஆதரவை வழங்கவேண்டும்இஎன மேலும் தெரிவிக்கும் அவர் உலக உணவு திட்டம்  போன்ற சர்வதேச அமைப்புகள் தலையிட்டு இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கு உதவியை வழங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04