மக்களாணையினை இழந்த அரசாங்கத்திற்கு ஏனைய கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க கூடாது ; முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்தல்

By T. Saranya

06 Aug, 2022 | 03:32 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மக்களாணையினை   இழந்த அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் சர்வ கட்சிகள் அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க கூடாது. அது மேலும் நெருக்கடியை உக்கிர மடைய செய்யும். 

அடக்குமுறையை கொண்டு போராட்டங்களை முடக்கப் பார்க்கிறார்கள். நெருக்கடிகளுக்கு தீர்வுகள் இல்லாத அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று முன்னிலை சோஷலிச கட்சி பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரேரணைகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,

மக்களாணை இழந்த அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் சர்வ கட்சிகள் அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க கூடாது.அது மேலும் நெருக்கடியை உக்கிர மடைய செய்யும்.   

போராட்டங்கள் ஊடாக நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகளை உறுதியாக நம்ப வேண்டும். அரசியலமைப்பில் மற்றும் பாராளுமன்றத்தினால் முடியாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை நாட்டில் இருந்து  விரட்டியடித்தது

போராட்டத்திற்கு தனித்துவம் இருக்கிறது. போராட்டங்கள் மூலம் தீர்வுகளை பெற்று விட முடியாது என்று கூறுபவர்களுக்கு அரசியலமைப்பில் முடியாத விஷயங்களை கூட செய்து காட்டிருயிக்கிறது.

இப்போது மக்கள் மத்தியில் போலியான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்று. ஆனால் ஆர்ப்பாட்டங்கள் முடியவில்லை. இதை விட ஜனாதிபதி, பிரதமர் போன்ற தற்போதைய ஆட்சியாளர்கள் தெரியும் போராட்டங்கள் இன்னமும் முடியவில்லை என்று. இது தொடர்பாக அவர்கள் தவறான அபிப்பிராயங்கள் வெளியிட்டாலும் போராட்டம் நிறைவுறாது.

ஆனால் அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக தற்போது போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு இருக்கிறது.

ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்ஷ வெளியேறி இருந்தாலும் பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. மக்களாணையின்றி அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி விக்ரமசிங்க பதவியில் இருக்கிறார். ஆதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

போராட்டங்களில் மக்களால் முன் நிறுத்தப்பட குறிப்பிட்ட திருத்தங்கள் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொருளாதார மாற்றங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் அது தொடர்பான ஸ்திரமான வேலைத்திட்டங்கள் கட்டியெழுப்ப வேண்டும்.

மேலும் மக்கள் மூலம் தெரிவு செய்யக்கூடிய தேர்தல் முறையின் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.மேலும் இதனை ஜனநாயக கோட்பாட்டுக்குள் உள்ளடக்க வேண்டும்.

மக்கள் வெளியில் இருந்து கொண்டு பாராளுமன்றத்திற்குள் ஆதிக்கம் செலுத்த கூடிய வகையில் புதிய முறைமைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆவை நிறைவேறும் வரை போராட்டங்கள் முடிவுறாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right