கம்பஹாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி , சந்தேகபநபர் தப்பியோட்டம்

By T. Saranya

06 Aug, 2022 | 04:20 PM
image

(எம்.மனோசித்ரா)

கம்பஹா - கெஹெல்பத்தர பிரதேசத்தில் இன்று (06) சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடுகம்பொல - கெஹெல்பத்தர பிரதேசத்தில் நேற்று முற்பகல் சுமார் 10.20 மணியளவில் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத சந்தேகநபரால் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் , குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகை அலங்கார நிலையமொன்றில் நின்று கொண்டிருந்த இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து கெஹெல்பத்தர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right