சீனா கப்பலின் விஜயத்தை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் இந்திய ஊடகம் தகவல்

By Rajeeban

06 Aug, 2022 | 01:18 PM
image

சீனா கப்பலின் இலங்கை விஜயத்தின் உண்மையான நோக்கம் குறித்து இலங்கை கேள்வி எழுப்பியதை தொடர்ந்து சீனாவின் யுவாங் வாங்5 உளவு கப்பலின் பிற்போடுமாறு விஜயத்தைஇலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக  இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆலோசனைகளை மேற்கொள்ளும் வரை கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இது தொடர்பான கடிதத்தை பார்த்துள்ளதாக  சிஎன்என் -நியுஸ் 18 தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் ஆராயப்படும் வரை யுவான் வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் திகதியை பிற்போடுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளதை காண்பிக்கும் கடிதம் என தெரிவித்து அந்த கடிதத்தை இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்திய அரசாங்க வட்டாரங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன,சீனா ஏனைய நாடுகளின் இறைமையை மதிக்கவேண்டும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என சிஎன்என் நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right