கிண்ணியாவில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட எரிபொருள்களுடன் இருவர் கைது

By T. Saranya

06 Aug, 2022 | 02:44 PM
image

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முற்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட டீசல் கொள்கலன்கள்  பொலிஸாரால் சுற்றி வலைக்கப்பட்டு நேற்று (05) மாலை கைப்பற்றப்பட்டது.

குறித்த சுற்றி வலைப்பின்போது 200 லீற்றர் டீசல் மற்றும்  100 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கிண்ணியா முனைச்சேனை  எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து  முச்சக்கரவண்டியில்  எரிபொருளை எடுத்து செல்லும் வழியிலேயே பொலிஸாரால் குறித்த முச்சக்கர வண்டி மடக்கிப்பிடிக்கப்பட்டு 04  கொள்கலன்களும் அவர்களது வீட்டிலிருந்து 4  கொள்கலன்களும் அடங்கலாக 8 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

முறையான அனுமதிப்பத்திரம்    இல்லாமல் எரிபொருள் கலன்களை சந்தேக நபர்கள் எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள்   கிண்ணியா சூரங்கள்  பகுதியைச் சேர்ந்த   21 மற்றும் 23    வயதுடையவர்கள்   என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும், திங்களன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  சமிந்த பெர்னாண்டோ  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right