இலங்கைக்கு செய்தியொன்றை தெரிவிக்கும் விதத்தில் சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டவர்களை கப்பல் மூலம் அனுப்பியது அவுஸ்திரேலியா

By Rajeeban

06 Aug, 2022 | 08:07 AM
image

அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற 46 இலங்கையர்களை தனது பாரிய ரோந்து கப்பல் மூலம் இலங்கைக்கு மீண்டும் அழைத்து சென்றதன்  மூலம் அவுஸ்திரேலிய எல்லை காவல் படை செய்தியொன்றை தெரிவித்துள்ளது.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டிலிருந்து தப்பிவெளியேறி அவுஸ்திரேலியா வர முயன்றவர்களை  முதல் தடவையாக அவுஸ்திரேலியா கப்பல் மூலம் கொண்டு சென்று அந்த நாட்டிடம் ஒப்படைத்துள்ளது.

இதுவரை விமானம் மூலம் திருப்பியனுப்பிவந்த அவுஸ்திரேலியா அவர்களை கப்பல் மூலம் திருப்பியனுப்பியுள்ளது.

21 ம் திகதி அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இடைமறிக்கப்பட்டவர்களுடன் 110 மீற்றர் நீளமான ஓசன் ஷீல்ட் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு சென்றது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து படகுகள் மீண்டும் அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட தொடங்கிய பின்னர் இதுவரை 183 பேரை இடைமறித்து அவுஸ்திரேலியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை வரை இவர்கள் அனைவரும் விமானம் மூலமே திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்குள் வர முயன்றவர்களை வேறு வழியில் அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய எல்லை காவல் படை தீர்மானித்தது.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக  நுழைய முயலும் படகுகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற செய்தியை தெரிவிப்பதே அவுஸ்திரேலிய எல்லைக்காவல் படையின் முக்கிய நோக்கம்.

அவர்கள் ஏன் கடல் மூலம் அவர்களை கொண்டு வந்தனர் என்பது தெரியவில்லை ஆனால் ஆனால் சட்டவிரோதமாக பயணிக்க விரும்புவர்களிற்கு இது செய்தியொன்றை தெரிவித்துள்ளது என இலங்கை கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

ஜூலை 6 ம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட 46 பேரை வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலிய எல்லை காவல் படையின் கப்பலில் இருந்து இறக்கி இலங்கை  பொலிஸார் குடிவரவு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக  அவர் தெரிவித்தார்.

அதிகாரத்திற்கு வந்த பின்னர் எல்லை காவல் விடயங்களில் தளர்ச்சியை செய்யப்போவதில்லை என தொழில்கட்சி தெரிவித்திருந்தது.

இலங்கையிலிருந்து படகுகள் வருவதை தடுக்க உதவுவதற்காக உள்துறை அமைச்சர்  கிளார் ஓ நெயில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நடவடிக்கைகள் குறித்து அவர் எதனையும் தெரிவிக்காத போதிலும் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இறைமையுள்ள எல்லை நடவடிக்கை என்பது அரசாங்கத்தின் கொள்கை நான் பதவியேற்ற பின்னர்  படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற  ஒவ்வொருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right