ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான வன்முறைகள் பழிவாங்கும் நடவடிக்கைகளிற்கு 12 சர்வதேச அமைப்புகள் கண்டனம்

By Rajeeban

06 Aug, 2022 | 08:08 AM
image

கைதுகள் அச்சுறுத்தல்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முகாம்கள் மீது ஜூலை 22 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உட்பட இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான வன்முறைகள் பழிவாங்கும் நடவடிக்கைகளை 12 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

ஐந்தாம் திகதி மாலை ஐந்து மணியுடன் அதிகாரிகள் வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கோட்டா கோ கம பகுதியில் படையினர் அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்தாமலிருப்பதையும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களின்  உரிமைகளை மதிப்பதையும்  இலங்கை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும், என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

18ம் திகதி பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அவசரகாலசட்டத்தை பிரகடனம் செய்தார்,.கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் படையினருக்கும் பொலிஸாருக்கும் முழுமையான அதிகாரங்களை வழங்கினார் அவசரகாலச்சட்;டம் பாதுகாப்பு தரப்பினரிற்கு மேலும் துணிச்சலை வழங்குகின்றது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவசரகால சட்டம் அமைதியானமுறையில் உடன்பட மறுப்பவர்களை  அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குமுறைகளை முன்னெடுப்பதற்குமான ஆயுதத்தினை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குகின்றது எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமைதியான ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் குற்றங்களாக்கப்படுகின்றனர்,நியாயபூர்வமான அரசியல் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கருத்துச்சுதந்திரம் தன்னிச்சையாக மறுக்கப்படுகின்றது எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right