லிட்ரோ எரிவாயு சிலின்டரின் விலையை திங்கட்கிழமை முதல் குறைக்க தீர்மானம்

By T Yuwaraj

05 Aug, 2022 | 10:30 PM
image

 லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவுடன் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் - லிட்ரோ நிறுவனம் |  Virakesari.lk

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்தள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படும் என முன்னதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருந்தார்.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், தற்போதைய விலை 4,910 ரூபாவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right