(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டதனால் செயலிழக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு(கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு(கோபா) உட்பட அனைத்து குழுக்களையும் நியமிக்கும் நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
அதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் குழுக்களை நிறுவும் பிரதான குழுவான பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 9ஆம் திகதி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பாராளுமன்ற குழுக்களுக்கு அந்ததந்த கட்சிகள் மூலம் முன்னிலைப்படுத்தப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் அடுத்தவாரம் பேட்புமனு கோரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் முடிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒருசில குழுக்கள் தவிர்ந்த 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற குழுக்கள் செயலிழக்கப்பட்டன. பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டதன் மூலம் செயலிழக்கப்படாத குழுக்களான, உயர் பதவிகள் தொடர்பான குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பாராளுமன்ற விசேட குழு ஆகியவையாகும்.
அத்துடன் செயற்குழுக்கள் செயலிழந்தாலும் அவைகளினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் வேறு நடவடிக்கைகளை அதில் இருந்து தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றே பாராளுமன்ற அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த மாதம் 28ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் முடிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM