சந்திரனுக்கு தனது முதலாவது செய்மதியை ஏவிய தென் கொரியா

By T Yuwaraj

05 Aug, 2022 | 07:46 PM
image

தென் கொரியாவானது சந்திரனுக்கான தனது முதலாவது செய்மதியான ஸ்பேஸ் எக்ஸை நேற்று வியாழக்கிழமை (04.08.2022) ஏவியுள்ளது.

இந்த செய்மதியை ஏவும் நடவடிக்கை வெற்றி பெறும் பட்சத்தில் சந்திரனின் தூரப் பிரதேசத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா சகிதம் செய்மதியை செயற்படுத்தும் நாடு என்ற பெருமையை தென் கொரியா பெறும். அந்த செய்மதி சந்திரனின் மேற்பரப்பிற்கு மேலாக 100 கிலோமீற்றர் உயரத்தில் வலம் வரவுள்ளது. இந்த செய்மதி திட்டம் 180 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தென்கொரியாவால் 6 வார காலப் பகுதியில் விண்ணுக்கு அனுப்பப்படும் இரண்டாவது செய்மதியாகும். இதற்கு முன்னர் அந்நாடு கடந்த ஜூன் மாதம் பூமியை வலம் வரும் செய்மதியொன்றை வெற்றிகரமாக ஏவியது.

இந்தியா, ரஷ்யா மற்றும் ஜப்பான் என்பன இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் சந்திரனுக்கு புதிய செய்மதிகளை அனுப்பவுள்ளன. அதேசமயம் இந்த மாத இறுதியில் நாசா சந்திரனுக்கு தனது மிகப் பெரிய ஏவுகணையொன்றை ஏவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right