சட்டமா அதிபரின் இணக்கப்பாட்டை அடுத்து தமது நிலைப்பாட்டை மாற்றிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

Published By: Vishnu

05 Aug, 2022 | 09:08 PM
image

(நா.தனுஜா)

கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்றுவதற்கான முயற்சிகளை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இடைநிறுத்துவதற்கு சட்டமா அதிபர் இணங்கியிருக்கும் நிலையில், தாம் தொடர்ந்து அங்கு இருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டப்பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் கலைந்துசெல்வதற்கும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படுவதற்கும் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை பொலிஸாரால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலையில் அங்கிருந்த குறித்த எண்ணிக்கையிலான கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் போராட்டக்காரர்களும் பெருமளவிற்குக் கலைந்துசென்றனர்.

இருப்பினும் உரிய சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகளை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இடைநிறுத்துவதற்கான தனது இணக்கப்பாட்டை சட்டமா அதிபர் வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து நள்ளிரவு வேளையில் போராட்டக்களத்தின்மீதும் தம்மீதும் தாக்குதல் நடாத்தப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதற்குத் தயாராக இருந்த போராட்டக்காரர்கள் சிலர், சட்டமா அதிபரின் இணக்கப்பாட்டை அடுத்து 5 ஆம் திகதி அங்கேயே தங்கியிருப்பதற்குத் தீர்மானித்தனர். 

அதுமாத்திரமன்றி காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம'வில் இருந்து தாம் வெளியேறினாலும் முறையானதொரு ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்திய தமது போராட்டம் தொடரும் என்றும், அப்போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவோ அல்லது எந்தவொரு கட்சி சார்ந்ததாகவோ அமையாது என்றும் போராட்டக்காரர்கள் சிலர் கேசரியிடம் தெரிவித்தனர். 

அதேவேளை போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு ஏற்கனவே 05 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு வெளியேறாதபட்சத்தில் இரவோடிரவாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் தம்மத்தியில் நிலவியதாகத் தெரிவித்த போராட்டக்காரரொருவர், இருப்பினும் சட்டமா அதிபரின் அறிவிப்பை அடுத்து தாம் தொடர்ந்து அங்கிருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 இவ்வாறானதொரு பின்னணியில் 05 ஆம் திகதி மாலை வேளையில் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் சுமார் 50 பேர் வரையில் இருந்ததுடன் 6 கூடாரங்கள் அகற்றப்படாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 11:21:58
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25