தனக்கு துரோகம் செய்த காதலி பெங்குவினையும், அதன் காதலன் பென்குவினை யும் அடித்துத் துவைக்கும் பெங்குவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனக்கு துரோகம் செய்யும் காதலி அல்லது மனைவியை தண்டிக்கும் குணம் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல அது பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.

பென்குவின்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரை அருகில் நின்று கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றன. சில பென்குவின்கள் நடக்க மேலும் சில பென்குவின்கள் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

தனது காதலி வேறொரு பென்குவினுடன் சுற்றுவதை பார்த்து விட்ட ஆண் பென்குவின் அந்த காதலன் பென்குவினுடன் சண்டை போடுகிறது. தொடர்ந்து நடக்கும் சண்டையில் இரு பென்குவின்களுக்கும் இரத்தம் வந்துவிட தனது காதலன் பென்குவினை கூட்டிக்கொண்டு அந்த பெண் பென்குவின் வேறு இடத்தை நோக்கி செல்கிறது.

இதனைப் பார்த்து வெறுப்படையும் ஆண் பென்குவின் தனது காதலி பென்குவினையும் அடித்துத் துவைக்கிறது. இந்த சண்டையை பார்த்த யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட, தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த பெங்குவின் வீடியோ வைரலாகி வருகிறது.