ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கரிசனைகள்

By Rajeeban

05 Aug, 2022 | 05:26 PM
image

அல்ஜசீரா

இலங்கை எதிர்கொண்டுள்ள மிகமோசமான நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்துதல் கைதுசெய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்பில் புதன்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப்ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார்.

அரகலயவின் 50வது நாளை குறிக்குமுகமாக கொழும்பில் மே 28 ம் திகதி இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார்,பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கோத்தபாய ராஜபக்ச 14 ம் திகதி பதவிவிலகியதை தொடர்ந்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 20 ம் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைதுகள் இடம்பெறுகின்றன, இதுவரை கைதுசெய்யப்பட்ட மூத்த தொழிற்சங்கவாதி ஸ்டாலின்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்காக ராஜபக்சாக்களை குற்றம்சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விக்கிரமசிங்க ராஜபக்ச வம்சாவளியை பாதுகாக்கின்றார் என தெரிவிப்பதுடன் அவரும் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் தற்போது இடம்பெறும் ஒடுக்குமுறை கோத்தபாய காலத்தை விட மோசமானது என்கின்றார் சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கை குறித்த சிரேஸ்ட ஆலோசகர் அலன்கீனன் தெரிவித்தார்.

இந்த கைதுகவலையளிக்கின்றது என  ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லர் தெரிவித்துள்ளார்.

ஸ்டானின் போன்ற மனித உரிமை பாதுகாவர்களின் பணிகள் முன்னர் எப்போதையும் விட கடந்த வாரங்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் தண்டிக்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.

ரணிலையும் கைதுசெய்யவேண்டும்.

மே 28 ம் திகதி மாணவர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டக்காரர்கள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் ஆயிரக்கணக்கில் நடந்து வந்து கோட்டா கோ கமவில் ஒன்றுகூடினர்.

விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க விவகாரங்களிற்கான தற்போதைய ஆலோசகரும் ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரியவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக உள்ளார்.

மே 28 ம் திகதி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  கட்சி என்ற அடிப்படையி;ல ஐக்கியதேசிய கட்சி ஆதரவளித்தது,அதற்கு ரணில் விக்கிரமசி;ங்கவின் ஆதரவு இருந்தது என்பது தெளிவான வெளிப்படையான விடயம் என்கின்றார் தொழிற்;சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ரவி குமுதேஸ்.

கோத்தபாய ராஜபக்சவின் கீழ் பிரதமராக பதவி வகித்தவேளை ரணில்விக்கிரமசிங்க வெளிப்படையாக ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு ஆதரவளித்தார்.

ஜோசப் ஸ்டாலின் குற்றமிழைத்துள்ளார் என்றால் ரணிலும் குற்றமிழைத்துள்ளார் என்கின்றார்  ரவிகுமுதேஸ்.

கடந்த வருடம் ஸ்டாலின் ராஜபக்ச அரசாங்கத்தினால் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டவேளை ஐக்கியதேசிய கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில்விக்கிரமசிங்க மோசமான விளைவுகள் குறித்து எச்சரித்திருந்தார்.

சரியாக ஒரு வருடத்தின் பின்னர் கடுமையான விளைவுகள் குறித்து அன்று எச்சரித்த ரணில்விக்கிரமசிங்க தானும் அதனை செய்துள்ளார் என்கின்றார் ரவி குமுதேஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right