பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்குச் சென்று காணாமல்போன இரு இலங்கையர்கள் கண்டுபிடிப்பு 

By T Yuwaraj

05 Aug, 2022 | 05:31 PM
image

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற நிலையில். காணாமல்போன இலங்கையர்கள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் ஊடகம் ஒன்று  தெரிவித்துள்ளது.

பேர்மிங்ஹாமிலிருந்து மர்மமான முறையில் காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள நிலையில, மேலும் ஒருவர் தற்போதுவரை கண்டுபடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒரு மல்யுத்த வீரர், ஜூடோ வீரர் மற்றும் ஜூடோ பயிற்சியாளரும் அடங்குவர்.

இவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல்போயுள்ள நிலையில், குறித்த  மூவரும் முன்னதாகவே தங்களது கடவுச்சீட்டை ஒப்படைத்ததால் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் காணாமல்போனதை அடுத்து, பேர்மிங்ஹாமில் உள்ள இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அதிகாரிகள் தற்போது ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த காணாமல் போனோரில் இரண்டு பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்:

"30 வயதுடைய பெண் ஒருவரும், 40 வயதுடைய ஆண் ஒருவரும் கடந்து ஆகஸ்ட் முதலாம் திகதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள்  இருவரும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இன்று (4), 20 வயதுடைய மூன்றாவது நபர் ஒருவரும்  காணாமல் போயுள்ளமை தொடர்பான புகாரைப் பெற்றுள்ளோம். அவரைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ள இலங்கைக்கு திரும்புவதை தவிர்க்கும் முயற்சியில் மூவரும் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right