ஒயில் புல்லிங் 

By Nanthini

05 Aug, 2022 | 05:34 PM
image

நிறைந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, ஒயில் புல்லிங். அது வேறொன்றும் இல்லை. காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான்.

தினமும் ஒயில் புல்லிங் செய்தால் மூட்டு வலி பிரச்சினை மற்றும் மூட்டு வீக்கத்துக்கு விடுதலை கிடைக்கும்.

தைரொய்ட் பிரச்சினை உள்ளவர்களுக்கு கூட ஒயில் புல்லிங் சிறந்த நிவாரணி. ஒயில் புல்லிங் செய்வதன் மூலம் தைரொய்ட் சுரப்பிகள் சீராக சுரக்கப்படுகிறது. 

மூட்டு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஒயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை குறைக்கப்படுகிறது. தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி வராமலே தடுக்கப்படும்.

தினமும் தவறாமல் ஒயில் புல்லிங் செய்வதால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மை நீங்கி இயற்கையான மற்றும் அழகான முகப்பொழிவை பெறலாம்.

ஒயில் புல்லிங் செய்தல் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்க உதவுகிறது. இரவில் நல்ல உறக்கத்துக்கு கூட உதவுகிறது. 

நல்லெண்ணெய் பயன்படுத்தி ஒயில் புல்லிங் செய்வதனால், உடம்பு குளிர்ச்சி பெற்று கண்களில் உள்ள நரம்புகள் சீராகிறது.

மாதவிடாய் சீராக இருக்க சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சீராக வராது. ஒயில் புல்லிங் செய்வதன் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹோர்மோன்கள் சமநிலைப்படுத்தப்பட்டு மாதவிடாய் சுழற்சியானது சரியான முறையில் வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right