கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு

Published By: Vishnu

05 Aug, 2022 | 06:54 PM
image

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சிறுத்தை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் 04 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இலங்கைக்கு உரித்தான சிறுத்தை ஒன்று வீடொன்றுக்குள் புகுந்துள்ளது.

நாய் ஒன்றை துரத்தி வந்த குறித்த சிறுத்தை வீட்டின் கூரை மீது ஏறியபோது, கூரை உடைந்ததால், வீட்டுக்குள் விழுந்துள்ளது.

இதன்போது வீட்டிலுள்ளவர்கள் பயந்து என்னவென்று பார்த்தபோது சுமார் 6 அடி நீளமான சிறுத்தை வீட்டுக்குள் விழுந்ததை பார்த்துள்ளனர்.

இதன்போது வீட்டுக்குள் இருந்த சிறுத்தையை பார்வையிட சென்ற குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் சிறுத்தையின் தாக்குலுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், வீட்டிலிருந்த ஏனையோர் வீட்டை பூட்டிவிட்டு, வெளியே வந்து லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் ரந்தனிகல மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்ததுடன், அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, குறித்த சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசியை செலுத்தி மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

சுமார் 6 அடி நீளமான 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க இலங்கைக்கு உரித்தான சிறுத்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59