(பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கையிலிருந்து இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் சென்ற மற்றொரு வீரர் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை குழாத்தின் பொறுப்பு குழுவினர் தெரிவித்தனர்.
குத்துச்சண்டை அணியில் இடம்பெற்ற வீரர் ஒருவரே தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேர்மிங்ஹாம் என்ஈசி 4ஆம் இலக்க அரங்கில் நடைபெற்ற குத்துச் சண்டையின் போது கழிவறைக்கு செல்வதாக சக வீரர்களிடம் தெரிவித்துவிட்டு சென்ற குத்துச்சண்டை வீரர் விற்றாலி நிக்லஸ் அதன் பின்னர் திரும்பவில்லை என குத்துச் சண்டை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தில் தொழில் புரிந்த இவர் கிளிநொச்சியை சேர்ந்தவராவார்.
இதற்கு முன்னர் ஜூடோ அணி முகாமையாளரும் ஜுடோ சம்மேளனத் தலைவருமான அசேல டி சில்வா, ஜூடோ வீராங்கனை சமிலா டிலானி, மல்யுத்த வீரர் சனிpத் சத்துரங்க ஆகியோர் தலைமறைவாகினர்.
அவர்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக இலங்கை குழாத்துக்கு பொறுப்பான தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ தெரிவித்தார்
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM