தாயாகப் பாருங்கள்

By Nanthini

05 Aug, 2022 | 05:19 PM
image

கேள்வி

40 வயதுப் பெண் நான். மணமான நாள் முதல் என் மாமியார் என்னுடன் நன்றாகத்தான் பழகி வந்தார். இப்போது அடிக்கடி அவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் ஒரு வேலை கூட செய்ய மாட்டார். அப்படியே செய்தாலும் அரைகுறைதான். அவர் சமைத்தால் அடுப்பை கூட சுத்தம் செய்து வைக்க மாட்டார். நான் இரண்டு நாட்கள் வெளியே போய்விட்டு வந்தால் வீடு வீடாக இருக்காது. அவரிடம் ஏன் இந்த மாற்றம்? 

பதில்

மாற்றம் அவரிடமா, உங்களிடமா? இருவருக்கும் சண்டை வருகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் கடிதம் முழுவதுமே உங்கள் மாமியார் பற்றிய புகாராகத்தானே இருக்கிறது?

உங்களுக்கே நாற்பது வயதாகிறது. உங்களது மாமியார் ஒரு வேலையும் செய்வதில்லை என்கிறீர்களே? குறைந்தது அறுபது, எழுபது வயதுகளில் இருக்கும் ஒரு பெண் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

மாமியாரையும் உங்கள் தாயாக பார்த்தீர்கள் என்றால், இந்தப் பிரச்சினை ஒரே நாளில் தீரும். முயற்சி செய்து பாருங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right