7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

By T. Saranya

05 Aug, 2022 | 04:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் கடந்த 7 மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு  -  குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 147,192 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக 101,777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றலி; 98,124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது

மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி இந்த ஆண்டின் முதல் அiறாயண்டில் 140,701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். எனினும் 2021 ஆம் ஆண்டில் 117,952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right