நடுவானில் பறந்த விமானத்தினுள் புகுந்த பாம்பினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

08 Nov, 2016 | 02:29 PM
image

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பயணித்த ஏரோ மெக்சிகோ 230 என்ற விமானம் பறந்து கொண்டு இருந்தது.

இந்த விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி நீளமான பாம்பு ஒன்று கீழே விழுகிறது.

பாம்பை கண்ட உடன் பயணிகள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி மற்ற பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாம்பு பயணிகளிடையே புகுந்தவுடன் அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனர். 

அதிர்ஷ்டவசமாக, விமான குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை முன்னதாகவே மெக்சிக்கோவில் தரையிறக்கும் படி விமானியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதனையடுத்து, விலங்கு கட்டுப்பாடு அதிகாரிகள் விமானத்தில் வந்து பாம்பை பிடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மெக்சிகோ விமான நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்