நாட்டில் தற்பொழுது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா தொற்று நோயானது மன்னாரிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி இதுவரைக்கும் போடாதவர்கள் தடுப்பூசியை போடுவதன் மூலம் நோயால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகரிடம் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் வினவியபோது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது இம் மாதத் தொடக்கத்திலிருந்து நாளாந்தம் சுமார் பத்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.
இனம் காணப்படும் தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் ஒரு இடம் என்று அல்லாது மன்னார் மாவட்டத்தில் பரவலாகவே இனம் காணப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இத் தொற்றாளர்கள் மன்னாரில் நானாட்டான், முசலி பிரதேச பிரிவுகளில் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வந்தபோதும் தற்பொழுது இத் தொற்றாளர்கள் மன்னாரில் பரவலாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆகவே ஏற்கனவே இத் தொற்று நோயிலிருந்து விடுபடும் நோக்குடன் பூஸ்டர் மருந்து ஏற்றாதவர்கள் தற்பொழுது பூஸ்டர் ஊசியை போட்டுக் கொள்ளும்படி யாவருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது எனவும் , தற்பொழுது உருவாகியிருக்கும் தொற்று நோயால் பெரும்பாலும் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுகின்றபோதும் நோயின் வேகத்தை குறைப்பதற்காகவே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும்படி வேண்டப்பட்டுள்ளனர்.
தடுப்பூசியானது மன்னார் மாவட்டத்தில் சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வழங்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அந்தந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கேட்டு அறிந்து கொள்ளும்படியும் பொது மக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொது இடங்களில் ஒன்றுகூடும்போதும் பிரயாணங்கள் செய்யும்போதும் கட்டாயம் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் இவ்வாறு மேலும் தெரிவித்தார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM