வவுனியா பொலிஸாரின் மனித நேயமிக்க செயல்: குவியும் பாராட்டுக்கள்

By Digital Desk 5

05 Aug, 2022 | 04:55 PM
image

K.B.சதீஸ் 

வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எம்.எச்.ஐீ.சி.குமார (9405) வவுனியா நகர பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வீதியிலிருந்து கண்டெடுத்தார்.

அதன் பின்னர் அதில் இருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உரிய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் இது தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலை வழங்கியுள்ளார்.

அதனையடுத்து உரியவர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த கையடக்க தொலைபேசியானது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், தற்காலத்தில் இவ்வாறு நடந்து கொண்ட குறித்த பொலிஸ் சார்ஜன்ட்டின் செயற்பாடு சமூகத்தில் பலரின் மத்தியில் வரவேற்பினையும் பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right