கனிமொழியை சந்தித்தார் மிலிந்தமொராகொட

05 Aug, 2022 | 02:51 PM
image

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் இந்தியாவிற்கான  இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் ஜூன் மாதத்தில் தமிழக முதலமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவும் மிலிந்தமொராகொட  கனிமொழியை புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவும் விதத்தில் தமிழ்நாடு வழங்கிய மனிதாபிமான உதவிகளிற்காக இலங்கை தூதுவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான மிகவும் நெருங்கிய இன மத கலாச்சார உறவுகள் குறித்தும் அதனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right