சிட்னியில் 'அபிவிருத்தி' ஆண்டு விழா

By Nanthini

05 Aug, 2022 | 04:47 PM
image

வுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் சமர்ப்பணா நடனப்பள்ளியை (Samarpana Institute of Dance) சிதம்பரம் ஆர். சுரேஷ் - ஷோபனா சுரேஷ் எனும் 'பரத நாட்டிய தம்பதியர்' 2010ஆம் ஆண்டில் ஆரம்பித்து இற்றை வரை இயக்கி வருகின்றனர். 

இப்பள்ளியின் 2022ஆம் வருட ஆண்டுவிழா, 'திறமையை விரிவுபடுத்தல்' எனும் நோக்கில் 'அபிவிருத்தி' எனும் பெயரில் கடந்த ஜூன் 26ஆம் திகதி சிட்னியில் நடைபெற்றது. 

இதன்போது நடனப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து வர்ணம், நிருத்தம், நிருத்தியம் முதலான ஆடல் வகைகளை சிறப்பாக வழங்கியிருந்தனர். 

இந்நடன ஆற்றுகைக்கு ரமணா பகீரதன் (மிருதங்கம்), நர்த்தனா கனகசபை (வயலின்),  விஷ்ணி ரவீந்திரன் (வீணை), கேஷவ் ராம் (குரலிசை) இசைப் பங்களிப்பு வழங்க, சிதம்பரம் ஆர். சுரேஷ் - ஷோபனா சுரேஷ் நட்டுவாங்கம் செய்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right