புதுவித உணர்வை ஏற்படுத்தும் வியக்கவைக்கும் படங்கள்..! Published by MD.Lucias on 2016-11-08 13:55:52 நினைத்து பார்க்க முடியாத சில விடயங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துமளவுக்கு தொழினுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது. சாதாரணமாக பூமியை அண்டத்திலிருந்து பார்ப்பது எளிதான ஒன்றல்ல. குறிப்பாக அண்டத்திலிருந்து பூமியை பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உலக வரைப்படங்கள் ஊடாகவும் செட்டலைட் படங்கள் உடாகவும் பார்த்தே அறிந்திருக்கின்றோம். இதனைவிட கூகுள் வரைப்படங்கள் ஊடாகவும் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அண்டத்திலிருந்து பூமியை பார்ப்பதற்கு விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் இந்த உணர்வை எல்லோருக்கும் சாத்தியமாக்கி வருகிறார் பெஞ்சமின் கிராண்ட். இவர், டெய்லி ஓவர்வீயூ எனும் தனது இன்ஸ்டாகிராம் புகைப்பட சேவை பக்கம் மூலமாக விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை, புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார். அநேகமாக தினம் ஒரு பிரம்மாண்ட பார்வை படத்தை பகிர்ந்து வருகிறார். கூகுள் ஏர்த் மூலம் இந்த புகைப்படங்களை பெறும் பெஞ்சமின், ஒரு படத்தை எடுப்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் செலவிடுகிறார். தான் முதல் தடவையாக கூகுள் ஏர்த் மூலம் ஒரு படத்தை எடுத்தது விபத்து எனவும் பின்னர் அதனை ஒரு அடிப்படை தொழிலாக மாற்றி கொண்டதாகவும் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். இவரால் பதிவேற்றப்படும் ஒவ்வொரு படங்களும் பார்ப்பவர்களுக்கு வழமைக்கு மாறாக ஒரு வித உணர்வை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு உலக நாடுகளின் சில முக்கிய நகரங்களின் காட்சிகளை பெஞ்சமின் கிராண்ட் தனது புதிய புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். Tags பூமி அண்டம் விண்வெளி டெய்லி ஓவர்வீயூ இன்ஸ்டாகிராம் விண்ணில் பெஞ்சமின் கிராண்ட்