தொழிற்சாலைகள், வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் ; லிட்ரோ நிறுவனம்

Published By: Digital Desk 3

05 Aug, 2022 | 01:12 PM
image

நீண்ட வரிசைகள் இல்லாமல்  உள்நாட்டுக் கேள்வியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தற்காலிக கொள்வனவுக்கு மாறாக மொத்தமாகக் கொள்வனவுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்துக் கவனம் செலுத்துவதாக இலங்கையின் தேசிய எரிவாயு வழங்குனரான லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம் அண்மையில் அறிவித்தது. 

எரிவாயுவிற்கு தற்பொழுது காணப்படும் நெருக்கடியைத் தணிப்பதற்காக முன்மொழியப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக லிற்றோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

“தட்டுப்பாடு காணப்பட்டாலும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் உள்ள மற்றும் ஏனைய ஏற்றுமதி தொடர்பான தொழிற்சாலைகள், தற்போதைய தேவையாகவுள்ள வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குக் கொண்டுவரும் ஏனைய துறைகளுக்கு லிற்றோ கேஸ் லங்கா தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்கிறது. 

மேலும், லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம் கடந்த 3-4 மாதங்களில் தனியான விநியோகஸ்தராக சொந்த மக்களுக்கும், ஏனைய சந்தைப் பிரிவுக்கும் விநியோகத்தை வழங்கி வருகிறது. போட்டியாளருக்கு விநியோகத்தை வழங்க முடியாத நிலையில் நிலைமைகளைத் தனியாக நிர்வகித்தபோதும் தொடர்ச்சியாக கேள்வியைப் பூர்த்திசெய்ய முடியவில்லை” என பேச்சாளர் தெரிவித்தார். 

இடையேற்பாடு ஓடர் கலந்துரையாடல் செயற்பாடு குறித்து விளக்கமளித்த அவர், 2022/2023 கேள்விப்பத்திரத்துக்கு அமைய ஒரு மெற்றிக் தொன்  எரிவாயுவை ஆகக்குறைந்த விலையாக 96 டொலர்களுக்கு சிங்கப்பூரின் SIAM Gas நிறுவனம் வழங்க முன்வந்தது. 

எனினும், 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கான கடனுறுதிக் கடிதத்தை வழங்கும்வரை சரக்கைவெளியிட முடியவில்லை. மேலும் கட்டளையிடப்பட்ட 15,000 மெற்றிக்தொன்னை வழங்க முடியாத போதும் கடனுறுதிக் கடிதத் திகதியிலிருந்து 10 நாட்களுக்குள் உடனடியாக 6,600 மெற்றிக் தொன்னை வழங்க முடியும் என SIAM Gas  தெரிவித்தது.

அத்துடன், முன்னர் 96 டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் 112 அமெரிக்க டொலர்களுக்கே இந்தத் தொகுதியை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஜூன் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாத்தியக்கூறுகள் மற்றும் கால அவகாசங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுக்கு அமைய, இரண்டாவது குறைந்த விண்ணப்பத் தொகையில் 100,000 மெற்றிக்தொன்னை 129 அமெரிக்க டொலர் ரூபா பெறுமதியில் ஓமானி ட்ரேடிங் நிறுவனத்திடமிருந்து லிற்றோ கேஸ் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளவுள்ளது. 

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு கேள்விக் கோரல்களுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமான 17 அமெரிக்க டொலரானது இதனால் சாதாரணமாக சிலிண்டர் ஒன்றில் 80 ரூபா வித்தியாசமாகும். இருந்தபோதும்  சந்தையில் போதிய எரிவாயு இல்லாமல் மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே அமைச்சரவையின் எதிர்பார்ப்பாகவிருந்தது.

SIAM Gas நிறுவனம் இந்தக் கொள்வனவிலிருந்து வெளியேறியமையானது சில ஊடகங்களில் தவறாகச் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று தரகு தொடர்பான பிரச்சினை காரணமல்ல. மாறாக இந்த முக்கியமான கட்டத்தில் விநியோகத்தர் முன்வைத்த நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் காரணமாகும் என்பதை லிற்றோ கேஸ் நிறுவனம் கூறிக்கொள்ள விரும்புகிறது. 

விநியோகத்துக்குப் போதுமான கப்பல்கள் இன்மை போன்ற சரக்குப் போக்குவரத்து மட்டுப்பாடுகளும் SIAM Gas இன் இடையேற்பாடு கொள்வனவு மற்றும் நீண்டகால விநியோகக் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போனமைக்கான காரணங்களாகும். 

மொத்தத் தேவையானது ஆறு வாரங்களில் நான்கு கப்பல்கள்களாகக் காணப்படுகின்ற நிலையில் SIAM Gas நிறுவனத்தினால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அத்துடன், நேரடியான கொள்வனவுக்காக கப்பல் 26 வருடம் பழைமையானது. இதுபோன்ற காரணங்கள் தேசிய  எரிவாயு வழங்குனரான லிற்றோ கேஸ் நிறுவனம் நம்பகமான விநியோகஸ்தர்களைத் தேடுவதற்குப் பங்களிப்புச் செய்தன.

SIAM இடமிருந்து எரிவாயுவை  பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது முன்னைய தலைவரின் பதவிக் காலத்தில் அமைச்சரவை வழங்கியிருந்தது. இருந்தபோதும் இக்காலத்தில் காலத்தில் எந்தவொரு  ஒரு தொகுதியையேனும் கொண்டுவர முடிந்திருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் அடுத்த சிறந்த தெரிவான OQ Trading ற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதுடன், செயற்பாடு விரைவுபடுத்தப்படவுள்ளது.

2019 நவம்பர் முதல் 2021 டிசம்பர் வரையான காலப் பகுதியில் டுPபு  சிலிண்டரின் விலையை நிலையான விகிதத்தில் பராமரிக்க லிற்றோ கேஸ் லங்காவுக்கு 11.1 பில்லியன் ரூபா செலவாகியிருப்பதுடன், இதனால் சராசரி குடும்பங்களுக்கு LPG மலிவு விலையில் இருந்தது. கொவிட்-19 முடக்க சூழ்நிலைக்கு ஒத்துப்போகும் வகையிலும் இது காணப்பட்டது.

லிற்றோ கேஸ் லங்கா இலங்கையில் உள்ள மிகவும் இலாபகரமான அரசசார்பு நிறுவனம் என்பதுடன், 225 பேர் நிரந்தர பணியாளர்களுடன் வினைத்திறனான சேவையை வழங்கி வருகிறது. நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த தசாப்தத்தில் திறைசேரிக்கு 13 பில்லியன்களை வழங்கியுள்ளது.

சமூகப் பொறுப்புள்ள கூட்டுநிறுவனமாக லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம் கடந்த தசாப்தத்தில் 34.5பில்லியன் ரூபாய்களை வரியாகச் செலுத்தியுள்ளது. 

தற்பொழுது காணப்படும் பிரச்சினையைத் தீர்த்து நிலைமையை சீர் செய்வதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் ஒத்துழைக்குமாறு தேசிய எரிவாயு விநியோகஸ்தர் என்ற ரீதியில் லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம் கோரிக்கை விடுக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25