சிதம்பரம் ஆர். சுரேஷின் '108 பரதநாட்டிய ஜதிகள்'

By Nanthini

05 Aug, 2022 | 01:07 PM
image

மர்ப்பணா நடனப்பள்ளியின் (Samarpana Institute of Dance) ஏற்பாட்டில் '108 பரதநாட்டிய ஜதிகள்' எனும் நாட்டியப் பயிற்சி நூலானது கடந்த ஜூன் 12ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளியிடப்பட்டது.

அந்நாட்டில் வசிக்கும் பரதநாட்டிய கலைஞர் சிதம்பரம் ஆர். சுரேஷ் இந்நூலை எழுதியுள்ளார். 

இந்த நடனப்பள்ளியின் நிறுவுனர்களும் நடன ஆசிரியர்களுமான திரு. சிதம்பரம் ஆர். சுரேஷ் மற்றும் அவரது துணைவியாரான திருமதி. ஷோபனா சுரேஷ் (இலங்கை) ஆகிய இருவரது ஒருங்கிணைப்பில் நிகழ்த்தப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ சுப்ரமணிய ஐயர் சசிசேகரன், ஸ்ரீமதி மாலதி நாகராஜ், ஸ்ரீமதி திருகுஹா சக்தி, திரு. அருணாச்சலம், சட்டத்தரணி சந்திரிகா சுப்பிரமணியம், திருமதி. புவனேஸ்வரி வெங்கட்ராமன் (தமிழகத்தின் 'கலாசேத்ரா' நடனப்பள்ளியின் பழைய மாணவி) முதலானோர் கலந்துகொண்டனர். 

நிகழ்வின் சிறப்பம்சமாக சிதம்பரம் சுரேஷ் - ஷோபனா சுரேஷ் தம்பதியின் புதல்வியான செல்வி. ஓவியா சுரேஷின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

சிட்னியின் கம்பன் கழக தலைவர் திரு. திருநந்தகுமார், திருமதி. புவனேஸ்வரி வெங்கட்ராமன், திருமதி. மாலதி நாகராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நூலின் முதல் பிரதியை சிட்னியின் பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடன ஆசிரியை திருமதி. ஜெயலட்சுமி கந்தையாவும், இரண்டாவது பிரதியை மூத்த மிருதங்க கலைஞர் திரு. சுகந்திரராஜும் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து பிரபல கலைஞர்களான டாக்டர் உமா ஆனந்த், டி.ஆர். சுந்தரேசன், குத்தாலம் எம். செல்வம், நர்த்தகி நடராஜன், ஷீஜித் கிருஷ்ணா, டாக்டர் ஓ.எஸ். அருண், சங்கர் கந்தசாமி, ப்ருகா பெஷேல், வி.பி. தனஞ்சயன் ஆகியோரின் நூல் ஆய்வுரைக் காணொளிகள் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன. 

அத்தோடு அரங்கில் சமர்ப்பணா நடனப்பள்ளியின் சில மாணவர்கள் நூலில் உள்ளடங்கும் ஜதிகளுள் பத்தினை தெரிவு செய்து, அவற்றை நடன அசைவுகள் மூலம் காண்பித்தனர். 

இதன்போது நூலாசிரியர் சிதம்பரம் சுரேஷ் கூறுகையில், 

"'இந்த 108 பரதநாட்டிய ஜதிகள்' எனும் நூலில் ஒவ்வொரு ஜதிகளும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இந்த ஜதிகள் ஆடியோவாகவும் எமது சமர்ப்பணா இன்ஸ்டிட்யூட் இணையதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் ஒலி வடிவத்தை அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்நூலில் கடினமான ஜதிகளும் எளிய முறையில் ஆதி, ரூபகம், கண்ட சாபு, திஸ்ர சாபு, சங்கீர்ண சாபு போன்ற எல்லா தாளங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. நடனம் கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவை மிக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right