வரலட்சுமி விரத உற்சவம்

By Digital Desk 5

05 Aug, 2022 | 12:58 PM
image

எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வரங்களை அள்ளி தருளும் வரலட்சுமிவிரத உற்சவம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஸ்ணு ஆலயங்களில் மிகசிறப்பான வரலட்சுமி விரத உற்சவம் இடம்பெற்றது.

இவ் உற்சவத்தினை முன்னிட்டு யாழ் வரலாற்றுச்சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ வரமஹாலட்சுமி உற்சவம் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

இவ் கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் மற்றும் சீதேவி,பூமாதேவி, மஹாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள் ஆராதனைகள் என்பன இடம்பெற்று மஹாலட்சுமி செந்தாமரைபீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு பிரம்ம ஸ்ரீ செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.

பின்னர் வரமஹாலட்சுமி நூல்காப்பும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் வழங்கிவைத்தனர். வரமஹாலட்சுமி விரத உற்சவத்தில் பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றதுடன் நெய்தீபம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right