தாய்லாந்தில் தீ விபத்து : 13 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

By Digital Desk 5

05 Aug, 2022 | 12:56 PM
image

தாய்லாந்தில் விடுதி ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தாகவும் மேலும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Fire at Thai nightclub kills 13 - World News

பாங்கொக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Large fire at a Thailand night club leaves 13 dead, 35 injured

பெரும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், பீதியடைந்த மக்கள் விடுதியைவிட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Thailand: 13 People Killed, 40 Injured In Massive Fire At Night Club; Probe  Ordered

இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது ஆண்கள் எனவும், இவரர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right