பா ரஞ்சித்தின் 'நட்சத்திரங்கள் நகர்கிறது' திரைப்பட வெளியிட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

05 Aug, 2022 | 12:54 PM
image

நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நட்சத்திரங்கள் நகர்கிறது' என்ற திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனித்துவமான படைப்புகளால் பிரத்யேகமான அடையாளத்தை பெற்றிருக்கும் படைப்பாளிகளில் ஒருவரான பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நட்சத்திரங்கள் நகர்கிறது'. 

இதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சர்பட்டா பரம்பரை' பட புகழ் நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கலையரசன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தென்மா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை யாழி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தில் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் 31ஆம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பா. ரஞ்சித் படைப்பு என்பதாலும் , தன்பாலின மற்றும் பாலின சிறுபான்மையினரிடையே ஏற்படும்  காதலையும், உறவுகளையும் மையப்படுத்திய படைப்பு என்பதாலும், 'நட்சத்திரங்கள் நகர்கிறது' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35