அவுஸ்திரேலியாவில் காருக்குள் சுய இன்பம் அனுபவித்ததால் நாடுகடத்தப்படும் அபாயத்தில் இளைஞன்

Published By: Vishnu

05 Aug, 2022 | 11:45 AM
image

அவுஸ்­தி­ரே­லி­யாவில் நபர் ஒருவர் காருக்குள் வைத்து சுய­இன்பம் அனு­ப­வித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் நாடு கடத்­தப்­ப­டக்­கூ­டிய நிலையை எதிர்­கொண்­டுள்ளார்.

26 வய­தான இந்த இந்த நபர் நேபா­ளத்தைச் சேர்ந்­தவர். 2015 ஆம் ஆண்டு அவர் அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சென்­ற­டைந்தார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னியா மாநி­லத்தின் தலை­நகர் ஹோபார்ட்டில் உணவு விநி­யோக சார­தி­யாக அவர் பணி­யாற்­றினார்.

ஒருநாள் தனது காலை­நேர விநி­யோகம் முடி­வ­டைந்­த­வுடன் வீதி­யோ­ரத்தில் காரை நிறுத்­தி­விட்டு சுய­இன்பம் அனு­ப­வித்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

அங்கு மேற்­படி கார் நிறுத்­தப்­பட முடி­யாது என்­பதை தெரி­விப்­ப­தற்­காக நக­ர­சபை ஊழியர் ஒருவர், காரின் அருகே சென்­ற­போது, சார­தியின் நட­வ­டிக்­கையை கண்டார். 

அதை­ய­டுத்து, அவரை அங்­கி­ருந்து செல்­லு­மாறு நக­ர­சபை ஊழி­யர்கள் கூறினர். எனினும் பின்னர், தடை­செய்­யப்­பட்ட நடத்­தையில் ஈடு­பட்­ட­தாக அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இது தொடர்­பான வழக்கில் தான் குற்­ற­வாளி என மேற்­படி இளைஞன் ஒப்­புக்­கொண்டார். 

இவ்­வ­ழக்கின் ஒரு பகு­தி­யாக, அவர் மீண்டும் குற்­றச்­செ­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு வாய்ப்­புள்­ளதா, பாலியல் குற்­ற­வா­ளிகள் பட்­டி­யலில் அவரின் பெயர் இடம்­பெற்­றி­ருக்க வேண்­டுமா என்­பது குறித்து ஆரா­யு­மாறு தாஸ்­மே­னியா சமூக சீர்­தி­ருத்தச் சேiயிடம் கோரப்­பட்­டது.

இது தொடர்­பாக அதி­கா­ரிகள் சமர்ப்­பித்த அறிக்­கையில் அவர் பாலியல் குற்­ற­வா­ளி­யாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

இதனால் இந்­நபர் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­படும் நிலையை எதிர்­நோக்­கு­கிறார் என அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. 

இந்­நி­லையில், குறித்த இளைஞர் தொடர்­பாக தாஸ்­மே­னிய சமூக சீர்­தி­ருத்தச் சேவை­யினால் தவ­றான மதிப்­பீடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அவரின் சட்­டத்­த­ரணி நீதி­மன்றில் தெரி­வித்­துள்ளார். உள­வியல் நிபு­ணர்­க­ளான டாக்டர் கிராண்ட் பிளேக் மற்றும் டாக்டர் எம்மா கொலின்ஸ் ஆகி­யோ­ரிடம் அறிக்கை பெற்று அதனையும் நீதிமன்றில் சட்டத்தரணி  சமர்ப்பத்தார். 

மேற்படி இரு நிபுணர்களும், தாஸ்மேனிய சமூக சீர்திருத்தச்சேவையின் மதிப்பீட்டை நிராகரித்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right